TNJFU

11.01.2019 – ராபி முன் பருவ விழிப்புணர்வு பெருவிழா மற்றும் உலக மண்வள தின விழா

நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தினுடைய வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல், நடத்தும் ராபி முன் பருவ விழிப்புணர்வு பெருவிழா மற்றும் உலக மண்வள தின விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.01.2019 அன்று நடைபெற்றது. இதில் உறுப்புக்கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரியின் கீழ் இயங்கும் மெட்ரோ மீன்பதன தொழில்நுட்பக் கூடம் பங்கு பெற்றது. இம்முகாமை முனைவர். எஸ்.சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். எஸ். பெலிக்ஸ் அவர்கள் தொடங்கிவைத்தனர். மெட்ரோ மீன்பதன  தொழில்நுட்ப கூடத்திலிருந்து மீன் ஊறுகாய், மீன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன் குழம்பு, இறால் குழம்பு, குர்குரே,  கருவாடு,  கடற்பாசி பிஸ்கட்,  இறால் ஊறுகாய், மீன் பாஸ்தா, புகையூட்டிய மீன் பிரியாணி, புகையூட்டிய இறால் பிரியாணி, கடற்பாசி குர்குரே, புகையூட்டிய மீன், மீன் பிஸ்கட்,  நெத்திலி கருவாடு, வாளை கருவாடு, மற்றும் மதிப்புக்கூட்டல் சம்பந்தமான  சிற்றேடுகள் பார்வைககு  வைகக்ப்பட்டன. இந்த விழிப்புணர்வு முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர். மகளிர் மற்றும் தொழில் முனைவோர்க்கு மீன் மதிப்புக்கூட்டலில்  உள்ள தொழில் வாய்ப்புகள் பற்றி முனைவர். ப.கார்த்திக்குமார், உதவிப்பேராசிரியர்,  மீன்வளப் பொறியியல் கல்லூரி, அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்.