Business Opportunities in Dry Fish Products

One day workshop on “Business Opportunities in Dry Fish Products” is organized by Department of Fish Process Engineering of College of Fisheries Engineering, a constituent College of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University Nagapattinam on 21.08.2018 at Metro Fish Processing facility. The program was inaugurated by Dr. S. Balasubramanian, Dean College of Fisheries Engineering, Panangudi and motivated the students to become entrepreneur in seafood business. Followed by Dr. K. Rathnakumar, Professor and Head, Department of Fish Process Engineering explained about the importance of fish nutrition and scope of value addition in fish processing. Hands on session on hygienic production of dry fish using solar tunnel drying unit was handled by Dr. P. Karthickumar, Assistant Professors of department of fish process engineering. Dr. N. Manimehalai, Associate Professor explained the technologies available in metro fish processing facility. The event co-ordinator Dr. P. Karthickumar, Assistant Professor delivered vote of thanks and requested the participants to utilize the metro fish processing facility and become entrepreneur. Around thirty students from various colleges located in and around Nagapattinam were attended the workshop.


உலர்மீன் பொருட்களில் இருக்கும் தொழில் வாய்ப்புகள் பற்றிய பயிற்சி பட்டறை

மீன் ஓர் ஊட்டச்சத்து மிக்க உணவு என்றாலும் எளிதில் கெட்டுப்போகக்கூடியது. விஞ்ஞான வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் மீன் பதப்படுத்துதலில் உலர்மீன் தயாரிப்பு நீண்ட நெடுங்காலாமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தியில் இருபது சதவிகிதம் உலர்மீன் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. உள்நாடு மற்றும் அயல்நாட்டுகளில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உலர்மீன்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ஆகவே குறைந்த முதலீட்டில் உலர்மீன் தயாரிப்பில் உள்ள தொழில் வாய்ப்புகளை கடலோர இளைஞர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் பயிற்சி பட்டறை தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் உறுப்புக்கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் மெட்ரோ மீன்பதன தொழில்நுட்ப கூடத்தில் 21.08.2018 அன்று நடைபெற்றது. பயிற்சி பட்டறையை கல்லூரி முதல்வர் முனைவர் சி. பாலசுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்து மீன்பதப்படுத்துதலில் இளைஞர்களின் பங்கு மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார். மீன் உணவின் முக்கியத்துவம் மற்றும் மதிப்புக்கூட்டலின் தொழில்நுட்பங்கள் பற்றி மீன்பதன பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் கு. ரத்னகுமார் தெரிவித்தார். சுகாதாரமான மீன்களை எவ்வாறு சுத்தம் செய்து சு10ரிய ஒளி கூடாரத்தில் உலர வைப்பது பற்றி முனைவர். ப. கார்த்திக்குமார் செய்முறை விளக்கம் அளித்தார். மீன்பதன தொழில்நுட்ப கூடத்தில் உள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் அதில் உள்ள தொழில் வாய்ப்புகள் பற்றி முனைவர் நா. மணிமேகலை இணைப்பேராசிரியர் தெரிவித்தார். இப்பயிற்சி பட்டறையில் நாகையில் உள்ள சுமார் முற்பது கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த பயிற்சி முகாமில் நன்றியுரை ஆற்றிய பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. கார்த்திக்குமார் அவர்கள் மீன்பதன தொழில்நுட்ப கூடத்தில் உள்ள வசதிகளை பயன்படுத்தி உலர்மீன் தயாரிப்பில் தொழில் முனைவோராக முன்வருமாறு பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களை கேட்டுக்கொண்டார்.