"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Latest News:

Fisheries College and Research Institute, Thoothukudi Organized “Mobile Lighting” as Part of Voter Awareness

The NSS unit of Fisheries College and Research Institute, Thoothukudi, a constituent college of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University organized “Mobile Lighting” and established the image as “VOTE 100%” as part of a Voter awareness program at the playground on 27.03.2019. Hundred students of this college were actively participated and used their mobile torch to produce image “VOTE 100%”.

The programme was conducted in the presence of Assistant Collector, Dr. Anu, I.A.S., who witnessed and appreciated the effort of the Fisheries College and Research Institute in creating awareness among the people of Thoothukudi. She also appreciated the effort of the students and staff of this institution. Dr. P. Velayutham, Dean i/c., Fisheries College and Research Institute, Thoothukudi applauded the effort of the students in making of very successful voter awareness programme. Dr.K.Veerabhadran, Vice President Students Association, Fisheries College and Research Institute, Thoothukudi also encouraged the students.

Mr.T.Ravikumar, Assistant Professor and NSS Programme Officer, Fisheries College and Research Institute, Thoothukudi coordinated the entire camp. Mr. A.Kumara Kannan, Student club Secretary proposed the vote of thanks.

 

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கைப்பேசி மின்ஒளி பயன்படுத்தி வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் கைப்பேசி மின்ஒளி பயன்படுத்தி வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 27.03.2019 அன்று நடத்தப்பட்டது. இக்கல்லூரியின் 100 மாணவ-மாணவிகள் இந்நிகழ்ச்சியில் மிகவும் ஆர்வமாக கலந்துகொண்டு தங்களது கைப்பேசியினை பயன்படுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியானது “VOTE 100 %” என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை டாக்டர் அனு, பயிற்சி ஆட்சியர், தூத்துக்குடி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும், அவர் கூறுகையில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமானது தூத்துக்குடி மக்களிடையே வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறது என மிகவும் பாராட்டி பேசினார். முதல்வர் (பொ). முனைவர் ப. வேலாயுதம் அவர்கள் மாணவ, மாணவிகளின் முயற்சியை மிகவும் பாராட்டினார். திரு. த.ரவிக்குமார், உதவிப் பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இம்முகாமை ஒருங்கிணைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்  செயலர் செல்வன் அ. குமரகண்ணன் நன்றியுரை ஆற்றினார்.