"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Latest News:

Will be Updated Soon

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக மகாத்மா காந்திஜியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. மீன்வளக் கல்லூரி முதல்வர் (பொ). முனைவர் ப.வேலாயுதம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். அவர் தமது உரையில் மகாத்மா காந்திஜியின் வாழ்க்கையையும் தேசத்திற்காக அவர் செய்த தியாகங்களையும் குறிப்பாக அஹிம்சா பற்றியும் பேசினார். மேலும் வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப மகாத்மா காந்தியின் பாதையைப் பின்பற்றும்படி மாணவர்களை கேட்டுக் கொண்டார். பின்னர் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மீன்வளக் கல்லூரியின் முதல்வர் (பொ). முனைவர் ப.வேலாயுதம் அவர்கள் சான்றிதழ் வழங்கினார். செல்வன். மாணவ இலக்கிய செயலாளர் சு. லீபன் நன்றியுரை ஆற்றினார். நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ரவிக்குமார் இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்திருந்தார்.