"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Latest News:

Will be Updated Soon

Training programme on Tilapia Farming conducted at Fisheries College and Research Institute, Thoothukudi

A two day training programme on Tilapia farming from 30.09.2019 to 01.10.2019 was conducted at Fisheries College and Research Institute, Thoothukudi, a constituent unit of Tamil Nadu Dr.J. Jayalalithaa Fisheries University. A total of 40 farmers of Narikudi, Virudunagar district participated. The training programme was jointly organized with ATMA Extension Reform scheme, Agriculture Department Virudhunagar Dt. The inaugural function was held on 30.09.19. Dr. P. Velayutham, Dean i/c presided over the function. In his presidential address, he requested the farmers to understand the details of Tilapia Fish Culture Technology to improve their socio-economic status. He also released a training manual on Tilapia Farming. Dr. M. Nagoor Meeran, Professor and Head, Department of Fisheries Extension, Economics and Statistics, delivered felicitation address. Dr. R. Santhakumar, Professor delivered welcome address. Dr. N.V. Sujathkumar, Professor proposed the vote of thanks. The topics such as tilapia varieties, cultivable qualities, pond preparation, biosecurity aspects, feed management, water quality management and economics were provided. Demonstration on feed preparation was also done. In the valedictory function Dr. P. Velayutham distributed the certificates and feedback was obtained from the participants.

 

திலேப்பியா மீன்வளர்ப்பு பயிற்சி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடியில் நடைபெற்றது

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பாக திலேப்பியா மீன்வளர்ப்பு பயிற்சி 30.09.19 முதல் 01.10.19 வரை இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. இப்பயிற்சியில் விருதுநகர் மாவட்ட நரிக்குடி வேளாண்மை விரிவாக்க துணை இயக்கம் மூலம் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின் துவக்க விழா 30.09.19 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் ப. வேலாயுதம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். அவர் தமது உரையில் விவாசயிகள் மீன்வளர்ப்பு தொழில் நுட்பங்களை திறம்பட அறிந்து கொண்டு விவசாயிகளின் வருமானத்தை பெருக்கி சமூக பொருளாதாரத்தில் மேம்பாடு அடையுமாறு கூறினார். முனைவர் மு. நாகூர் மீரான், பேராசிரியர் மற்றும் தலைவர், வாழ்த்துரை வழங்கினார். முனைவர் இரா. சாந்தகுமார், பேராசிரியர் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் ந.வ. சுஜாத்குமார், பேராசிரியர் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் திலேப்பியா மீன்வளர்ப்பு என்ற பயிற்சி கையேட்டை கல்லூரி முதல்வர் வெளியிட்டார். இப்பயிற்சியில் திலேப்பியா மீன்வகைகள், குளத்தயாரிப்பு, உணவு மற்றும் மேலாண்மை நோய் மேலாண்மை, அறுவடை மற்றும் பொருளாதாரம் ஆகிய உரைகள் செயல்முறை விளக்கக்களுடன் வல்லுனர்கள் எடுத்துரைத்தார்கள். பயிற்சி நிறைவு விழா 01.10.2019 மாலை நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ப. வேலாயுதம் சான்றிதழ்கள் வழங்கினார்கள். விவசாயிகள் பயிற்சி பற்றிய கருத்துகளை கூறினார்கள். இப்பயிற்சியை விருதுநகர் மாவட்டம் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமையுடன் இணைந்து நடத்தப்பட்டது.