Latest News:

National Webinar on Sustainable Aquaculture conducted on 12.01.2024

Department of Aquaculture, Fisheries College and Research Institute, Thoothukudi organised national webinar on Sustainable Aquaculture on 12.01.2024 between 9.30 am to 1.30 pm by online mode.

A total of 75 participants comprising entrepreneurs, feed manufacturers, Students, Research scholars and academicians from various parts of India have attended.

Th.Anix Vivek Santhiya welcomed the gatherings. Dr.B.Ahilan, Dean & Convenor, FC&RI, Thoothukudi delivered the inaugural address. In his inaugural address, he emphasized on status of aquaculture and its sustainability to the participants. After inaugural address, Dr.S.Athithan has delivered the talk on A Short Guide to Aquaculture to the participants. In this webinar, five external speakers from various parts of India have also delivered special lectures on Sustainable Aquaculture such as Risk and disease mitigation in vannamei farming, BMP for sustainable aquaculture, Effective coastal adoption in aquaculture, sustainable fishing and integrated farming, CAA role and guidelines in coastal farming & Government services and schemes for aquaculture development.

Dr.K.S.Vijay Amirtharaj Co-ordinator of this webinar proposed vote of thanks. Dr.S.Athithan, Professor & Head & Organizing Secretary of this webinar coordinated the entire programme successfully.

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்   12.01.2024 அன்று நிலையான மீன்வளர்ப்பு குறித்த தேசிய வளைப்பதிவு இணைய தள மூலமாக நடத்தப்பட்டது

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வரும் மீன்வளர்ப்பு துறை மூலம் 12.01.2024 அன்று காலை 9.30 மணி முதல் மதியம்  1.30 வரை நிலையான மீன்வளர்ப்பு குறித்த தேசிய வளைப்பதிவு இணைய தள மூலமாக நடத்தப்பட்டது  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழில் முனைவோர் தீவன உற்பத்தியாளர்கள் மாணவர்கள் ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் என மொத்தம் 75 பங்கேற்பாளர்கள் சிறப்பாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
திரு. அனிக்ஸ் விவேக் சந்தியா எல்லோரையும் வரவேற்றார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் மற்றும் கன்வீனர்  முனைவர்.பா.அகிலன் அவர்கள் தனது தொடக்கவுரையில் மீன்வளர்ப்பு இன்றைய நிலை மற்றும் பங்கேற்பாளர்களுக்கு அதன் நிலைத்தன்மை குறித்து உரையாற்றினார். தொடக்கவுரைக்கு பின் முனைவர் சா. ஆதித்தன் பேராசிரியர் மற்றும் தலைவர் மீன்வளர்ப்புத்துறை அவர்கள் கலந்து கொண்டவர்களுக்கு மீன்வளர்ப்புக்கான குறுகிய வழிகாட்டி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த வலைப்பதிவு நிகழ்ச்சியில் 5 வெளி பேச்சாளர்கள் இறால் வளர்ப்பில் ஆபத்து மற்றும் நோய்த்தடுப்பு நிலையான மீன்வளர்ப்பிற்கான சிறந்த மேலாண்மை முறைகள் மீன்வளர்ப்பு நிலையான மீன் பிடித்தல் மற்றும் ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பு இந்தியாவின் கடலோர மீன்வளர்ப்பு ஆணையத்தின் பங்கு மற்றும் அரசு சேவைகள் மற்றும் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள். 
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான முனைவர்.கே.ச.விஜய் அமிர்தராஜ் நன்றியுரை ஆற்றினார். முனைவர் சா.ஆதித்தன் போராசிரியர் மற்றும் தலைவர் இந்நிகழ்ச்சியினை வெற்றிகரமாக  ஒருங்கிணைத்து நடத்தினார்.