"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

TNJFU - 7th Convocation

The Seventh Convocation of the Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University (TNJFU), was held at its administrative Headquarters in Nagapattinam on 19.08.2022 in the gracious presence of Hon’ble Governor Chancellor of the University, Thiru. R. N. Ravi. A total of 366 graduates were conferred with the degrees ‘In-Person’ which include 230 B.F.Sc., 41 B.Tech. (Fisheries Engineering), 21 B.Tech. (Bio-Technology), 22 B.voc (IFPT), 06 M.Tech., 30 M.F.Sc., 4 MBA (Fisheries Enterprises Management) and 12 Ph.D. Further, a total of 48 persons will receive their degrees ‘In-Absentia’.

The Governor Chancellor presented overall 75 medals for academic excellence and performance to the students. In 2016-17 batch, Selvi. Bindiya Sharma bagged 11 medals in B.F.Sc and Selvi. S. Jenifer Loumin bagged three medals in B.Tech (Fisheries Engineering). In 2017-18 batch, Selvan. T. Bhuvaneshwaran bagged 10 medals in B.F.Sc, Selvi. S. Ayesha Selvi. bagged three medals in B.Tech (Fisheries Engineering), Selvi. S. Niroshini bagged two medals in B.Tech (Biotechnology) and Selvan. E. Prabhu bagged three medals in Ph.D. In 2018- 19 batch, Selvi. A. Aswini bagged six medals in M.F.Sc. In 2019-20 batch, Praisy M. Shaju bagged 8 medals in M.F.Sc. Thiru. Anitha R. Radhakrishnan, Hon’ble Minister for Fisheries & Fishermen Welfare and Pro-Chancellor of the University declared the institution of five new endowments for academic achievements.

Hon’ble Governor Chancellor in his presidential address invited the graduands to identify their uniqueness and individual strength to evolve with the technology for ensuring relevancy of the sector. He further added that as a responsible citizen every fisheries graduate has a major role to contribute to the Govt. of Tamil Nadu’s vision of achieving one Trillion economy by 2030 as well as to make India as a Global leader in all sectors by 2047. He also informed that if any of the graduand has a strong technical ‘know-how’, he can serve as a connecting point to convert it into successful start-up, as the Govt. of India has created conducive environment for the establishment of 70,000 start-ups, among which 100 of them have already reached the ‘unicorn’ status.

The Chief Guest of the day, “Padma Shri” Dr. S. Ayyappan, Chancellor, Central Agricultural University, Imphal presented and delivered the Convocation Address. The Chief Guest in his address appreciated the University for being innovative in formulating several new multidisciplinary and cross-cutting courses in fisheries among the 75 Agricultural Universities in the country. He further added that, the University’s contribution in providing qualified human resource is the ‘need of the hour’, as in line with the SDGs (Sustainable Development Goals) and with CAGR of 10%, our country is looking at a 25 million metric ton fish production by 2030, enabling the present per capita fish consumption of 12 kg to rise and also enlarge the fish eating population.

Fisheries is expected to meet the food demand estimates by 2050 indicating the need for doubling food production to meet the requirements for the projected population of 1.6 billion. The Chief Guest also invited the graduands to be ‘job-providers’ utilizing the schemes like PMMSY implemented by Govt. of India.

Earlier, Prof. G. Sugumar, Vice-Chancellor of the University welcomed the gathering and presented the report of the University. In the report, the Vice-Chancellor briefed the birth and profile of the University and elaborated the University’s significant achievements in its mandatory activities of education, research and extension achieved through its 40 independent constituent units spread across the State. He also added that the University will start offering two new Post-Graduate Diplomas in Aquaculture from the 2022-23 academic year.

Thiru. A. Karthik, I.A.S., Principal Secretary to Government, Department of Animal Husbandry, Dairying and Fisheries, Tamil Nadu; Dr. K. S. Palanisamy, I.A.S., Commissioner of Fisheries and Fishermen Welfare, Tamil Nadu; Dr. Arun Thamburaj I.A.S., District Collector, Nagapattinam; Thiru. G. Jawahar, I.P.S., Superintendent of Police, Nagapattinam and other district level senior administrative officials were the other noted dignitaries who graced the occasion.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஏழாம் பட்டமளிப்பு விழா 19.08.2022 அன்று மாண்புமிகு தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் உயர்திரு. ஆர். என். ரவி அவர்கள் தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில், 230 இளநிலை மீன்வள அறிவியல், 41 பி.டெக் (மீன்வள பொறியியல்), 21 பி.டெக் (உயிர் தொழில்நுட்பவியல் ) 22 இளநிலை தொழில்சார் படிப்பு, 6 எம். டெக் (மீன்வள பொறியியல்), 30 முதுநிலை மீன்வள அறிவியல், 4 எம்.பி.ஏ (மீன்வள தொழில் மேலாண்மை ) மற்றும் 12 முனைவர் பட்டபடிப்புகள் என மொத்தம் 366 மாணவ- மாணவியருக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட்டன.

மேலும், 48 மாணவ-மாணவியர் தங்களது பட்டங்களை தபால் மூலம் பெற உள்ளனர். மேதகு ஆளுநர் அவர்கள் மொத்தம் 75 பதக்கங்களை வெவ்வேறு கல்வி சாதனைகளுக்காக மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். இதில் 2016-17 கல்வியாண்டிற்கான இளநிலை மீன்வள பட்டபடிப்பில் செல்வி. பிந்தியா ஷர்மா 11 பதக்கங்களையும் பி.டெக் (மீன்வள பொறியியல்) பட்டபடிப்பில் செல்வி. எஸ். ஜெனிபர் லவ்மின் மூன்று பதக்கங்களையும் பெற்றனர். அதேபோல், 2017-18 கல்வியாண்டிற்கான இளநிலை மீன்வள பட்டபடிப்பில் செல்வன். டி . புவனேஸ்வரன் 10 பதக்கங்களையும், பி.டெக் (மீன்வள பொறியியல்) பட்டபடிப்பில் செல்வி. எஸ். ஆயிஷா ஜாஸ்மின் மூன்று பதக்கங்களையும், பி.டெக் (உயிர் தொழில்நுட்பவியல்) பட்டபடிப்பில் செல்வி எஸ். நிரோஷினி இரண்டு பதக்கங்களையும், முனைவர் பட்டபடிப்பில் செல்வன். இ. பிரபு மூன்று பதக்கங்களையும் பெற்றனர்.

மேலும், 2018-19 மற்றும் 2019-20 கல்வியாண்டிற்கான முதுநிலை மீன்வள பட்டபடிப்பில் செல்வி. எ. அஸ்வினி மற்றும் செல்வி. பிரைசி எம். சாஜூ ஆகியோர் முறையே ஆறு மற்றும் எட்டு பதக்கங்களை பெற்றனர். மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக இணைவேந்தர் திரு. அனிதா. ஆர். ராதகிருஷ்ணன் அவர்கள் கல்வி சாதனைகளுக்கான ஐந்து புதிய பதக்கங்களை நிறுவி அறிவித்தார். மேதகு ஆளுநர் அவர்கள் நிகழ்த்திய தலைமை உரையில், பட்டதாரிகள் தங்களுடைய தனித்துவத்தையும் பலத்தையும் கண்டறிந்து தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகேற்ப தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்தார்.

மேலும், அவர் 2030-ம் ஆண்டிற்குள் ஒரு இலட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதற்கான தமிழக அரசின் குறிக்கோளுக்கும், 2047-ம் ஆண்டிற்குள் அனைத்து துறைகளிலும் உலகளவில் முதலிடம் பெறுவதற்கான இந்திய அரசின் குறிக்கோளுக்கும் ஒவ்வொரு மீன்வள பட்டதாரிக்கும் பொறுப்பார்ந்த குடிமக்களாக முக்கிய பங்கு உண்டு என்று கூறினார். மேலும் அவர், இந்திய அரசானது தொழில்முனைவுக்கான அனைத்து வசதிகளையும் செம்மையாக செய்தமையால், நாட்டில் தற்போது 70,000 தொழில் துவக்கங்கள் (Start-ups) உள்ளன. இவற்றில் 100, ஏற்கனவே ஓரு பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பு (Unicorn) தகுதியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதலால், இன்று பட்டம் பெறும் மாணவர்களில் யாரேனும் ஓருவர் தன்னிடம் தொழில் துவக்கத்திற்கு தகுதியான தொழில்நுட்பத்தை தெரிவித்தால், அதை வெற்றிப்பெறும் தொழில் துவக்கமாக மாற்ற தேவையான அனைத்து உதவிகளையும் புரிய தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இப்பட்டமளிப்பு விழாவின் முதன்மை விருந்தினராக கலந்துக்கொண்ட மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் (இம்ஃபால்) வேந்தர் பத்ம ஸ்ரீ முனைவர் எஸ். ஐயப்பன், அவர்கள் பட்டமளிப்பு உரையை நிகழ்த்தினார். பட்டமளிப்பு உரையில், நம் நாட்டில் உள்ள 75 வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு எடுத்துக்காட்டாக மீன்வளத்தில் பல புதிய பல்துறை பட்டபடிப்புகளை உருவாக்கியதற்காக இப்பல்கலைக்கழகத்தை பாராட்டினார். வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்கள் (SDG) மற்றும் 10% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 2030 ஆண்டிற்குள் மீன் உற்பத்தியை 25 மில்லியன் மெட்ரிக் டன்- ஆக உயர்த்துவதோடு மட்டுமில்லாது தற்போது உள்ள தனிநபர் மீன் உண்ணும் அளவான 12 கிலோ கிராமை அதிகப்படுத்தவும் தகுதியான மனித வளத்தை மீன்வளத்துறைக்கு வழங்குவதில் இப்பல்கலைக்கழத்தின் பங்கு இன்றியமையதாது என கூறினார்.

மேலும், 2050 ஆண்டில் வாழக்கூடும் என கணக்கிடப்பட்ட 1.6 பில்லியன் மக்களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்ய, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீன்வளர்ப்பை இரட்டிப்பாக ஆக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இந்திய அரசால் செயல்ப்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்தி மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் கோ. சுகுமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று பல்கலைக்கழகத்தின் அறிக்கையை வாசித்தார். அவ்வறிக்கையில் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் மாநில முழுவதும் பரவியுள்ள பல்கலைக்கழகத்தின் 40 உறுப்பு அலகுகளின் மூலம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க செயல்பாடுகளில் நிகழ்த்திய சாதனைகளை எடுத்துரைத்தார்.

மேலும், 2022 - 23 கல்வியாண்டு முதல், நீருயிரி வளர்ப்பில் இரண்டு புதிய முதுநிலை பட்டயபடிப்புகள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் என தெரிவித்தார். திரு. எ. கார்த்திக் இ.ஆ.ப., முதன்மை செயலாளர், கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை: முனைவர் கே. எஸ். பழனிசாமி இ.ஆ.ப., ஆணையர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை: டாக்டர். அருண் தம்புராஜ் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர், நாகப்பட்டினம்: திரு. இ. ஜவஹர் இ.கா.ப., மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், நாகப்பட்டினம் மற்றும் பிற உயர் பதவி வகிக்கும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.