"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

COUNSELLING FOR UG ADMISSION 2022- 2023 – PRESS NEWS

The In-person counselling for candidates applied for undergraduate degree courses for the year 2022-23 under special categories was held on 19.09.2022 at the Auditorium, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam. Students of special categories viz. Sports, Ex-serviceman, Differently-abled, Fishermen wards, Students studied in the Tamil Nadu State Government Schools and Vocational Stream students were admitted. A total of 143 candidates were called for filling 68 seats falls under various special categories. 53 seats were filled with eligible candidates.

Dr. G. Sugumar, Vice Chancellor of the University awarded the provisional admission letters to the selected students. Dr. N. Felix, Registrar, Dr. P. Jawahar, Chairman, UG Admission Committee, Deans of various colleges have participated in conducting of counselling process. As in the past, this year also counselling for the general/community categories will be conducted through online mode from 20.09.2022 to 26.09.2022.

The candidates called for online counselling will be informed through their registered mobile number and registered e-mail only. The list of candidates called for online counselling will also be published in the University website ( www.tnjfu.ac.in ), said, Dr. G. Sugumar, Vice-Chancellor of the University.

2022-23 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு - பத்திரிக்கைச் செய்தி

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2022-23 ஆம் ஆண்டின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வு நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 19.09.2022 அன்று நடைபெற்றது. இக்கலந்தாய்வில மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர்கள் முன்னாள் இராணுவத்தினரின்; குழந்தைகள் மீனவர்களின் குழந்தைகள் தமிழ்நாடு அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் மற்றும் தொழிற்பிரிவில் பயின்றவர்கள் ஆகிய சிறப்பு பிரிவுகளின் கீழ் இட ஓதுக்கீடு வழங்கப்பட்டது. 68 இடங்களை நிரப்ப சுமார் 143 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். 53 இடங்கள் நிரப்பப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கோ. சுகுமார் அவர்கள் கலந்தாய்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை ஆணைகளை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் நா. பெலிக்ஸ் மாணவர் சேர்க்கை குழு தலைவர்; பா. ஜவஹர் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டு கலந்தாய்விற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

மேலும் கடந்த ஆண்டை போன்று இவ்வாண்டும் பொது கலந்தாய்வானது இணையதளம் மூலம் 20.09.2022 முதல் 26.09.2022 வரை நடைபெறும் என்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் மாணவர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்லிடைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக உரிய தகவல் அளிக்கப்படும் மற்றும் அவர்களின் விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்திலும் (www.tnjfu.ac.in) வெளியிடப்பட்டுள்ளது என்றும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கோ. சுகுமார்; அவர்கள் தெரிவித்தார்.