Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

Training Programme on "Boat Driver License Certificate Course"

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி, தமிழ்நாடு மீன்வர் மற்றும் மீன்வள நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகம். சென்னை இணைந்து படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்பு என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சி தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 05.05.2025 அன்று முதல் 1205.2025 வரை சென்னை இராயபுரம் மீன்பிடி துறைமுக வளாகத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெறுகிறது. பயிற்சியின் துவக்க விழா 05.05.2025 அன்று நடைபெற்றது.

பயிற்சியின் ஒருங்கினைப்பாளர் திரு. ரா வேல்முருகன், உதவிப் பேராசிரியர் வரவேற்புரை மற்றும் பயிற்சி விளக்க உரை நிகழ்த்தினார். இப்பயிற்சியில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை பகுதியைச் சார்ந்த 22 மீனவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கு வந்த மீனவர்கள் உயிரியளவியல் முறையில் தங்கள் வருகையினை பதிவு செய்து கொண்டனர்.

திரு.ப. திருநாகேஸ்வரர், உதவி இயக்குநர். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அவர்கள் தனது வாழ்த்துரையில் மீனவர்கள் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மீனவர்களுக்கு மீன்வளத்துறையின் மூலம் படகு ஓட்டுநர் உரிமம் வழங்கும் என்றும் கூறினார்.

திரு.கே.சசிதரன் உதவிஇயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், சென்னை. அவர்கள் மீனவர்கள் இப்பயிற்சியில் கலந்துக்கொள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் இத்தகைய திட்டங்களுக்கு நிதியுதவி செய்துள்ளது என்பது பற்றி எடுத்துரைத்தார்.

முனைவர். பா. ரீனாசெல்வி இணை இயக்குநர். (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சென்னை, அவர்கள் பயிற்சிக்கு தலைமை தாங்கி தலைமையுரையாற்றி மீனவர்கள் பயிற்சியில் தவறாமல் கலந்துக்கொண்டு படகில் பயன்படுத்தப்படும் மாலுமிக்களை சாதனங்கள். தகவல் பரிமாற்ற சாதனங்கள், உயிர் காப்பு சாதனங்கள் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து பயிற்சி பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றையும் அறிந்துக்கொண்டு மீனவர்கள் பாதுகாப்பாகவும் பொறுப்பான முறையிலும் மீன்பிடி தொழிலில் ஈடுப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

முனைவர். இரா ஜெய ஷகிலா முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக்கல்லூரி (ம)ஆராய்ச்சி நிலையம் பொன்னேரி. அவர்கள் தனது சிறப்புரையில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் எவ்வாறு இந்த பயிற்சியினை வடிவமைத்து மீனவர்களும் படகு ஒட்டுனர் உரிமம் பெற தேவையான பாடவரைவுகளை ஏற்பாடு செய்துள்ளது குறித்து தெரிவித்து, இந்தப் பயிற்சியானது மீனவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு மட்டுமல்லாது ஆழ்கடல் சட்டவிதிகள் மற்றும் சுற்றுசூழல் மேலாண்மை போன்றவற்றையும் அறிந்து மீனவர்கள் சரியான முறையில் பாதுகாப்புடனும், விழிப்புடனும் மீன்பிடிக்க கேட்டுக்கொண்டார்.

திரு. டே அருண் ஜெனிஸ் உதவி பேராசிரியர். அவர்கள் நன்றியுரை வழங்கினார். திரு. ஜான் ஜெசு பெக்கர், மற்றும் செல்வி. கலையரசி, மீன்வளத்துறை ஆய்வாளர்கள் பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். கல்லூரி பணியாளர்கள் மற்றும் மீன்வளத்துறை ஊழியர்கள் இணைந்து விழா ஏற்பாட்டை மேற்கொண்டனர்.

ஏழு நாள் பயிற்சி முடிவில் மீனவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் பல்கலைக்கழகம் மூலமும், படகு ஓட்டுனர் உரிமம் மீன்வளத்துறை மூலமும் வழங்கப்படும். இந்த உரிமம் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கும், கடலில் தங்களை பாதுகாத்து கொள்வதற்கும். அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள் பல பெறுவதற்கும். மீன்பிடிப்பு சுற்றுசூழல் குறித்த சர்வதேச விதிகளை அறிந்து கொள்வதற்கும் பெறும் உதவியாக இருக்கும்.

 

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in